திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 மே 2024 (16:10 IST)

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படம் மே மாதம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதன் இயக்குனர் பாஸ்கர் சக்தி முகநூல் வாயிலாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு டைட்டிலை வைக்க சொல்லி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழு அதை ஏற்றுக் கொள்ளாமல் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார்களாம். அதனால் படம் அறிவித்தபடி அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.