நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது !

aiswarya rajesh
Sinoj| Last Updated: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:11 IST)

சமீபத்தில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிக் கவுரவித்தது.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கலைமாமணி விருது வழங்கினார்.

தமிழக அரசு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்த நிலையில் தற்போது, சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில், விஜய் தேதுபதியுடன் க/பெ ரணசிங்கம் படத்தில் அவர்

சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :