வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (11:50 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவில் படப்பிடிப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவில் படப்பிடிப்பு!
மலையாளத்தில் மிகப் பெற்ற வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்றது. ’தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த பொங்கல் தினத்தில் மலையாளத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.