1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (17:51 IST)

வடசென்னை படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வுண்டர்பார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

 
வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 
இந்தப் படத்தின் முன்னோட்டம் தனுஷ் பிறந்தநாளன்று வெளியானது. டீஸர் ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது வுண்டர்பார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வடசென்னை படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.