1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (17:32 IST)

என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்: உருகிய தனுஷ்!

ஞாயிற்றுக்கிழமை சென்னையில்  `பியார் பிரேமா காதல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. இந்த படத்தை இளன் இயக்க, காதல் ரசம் சொட்ட சொட்ட ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடித்துள்ளார்.  இந்த படத்தின் ரொம்ன்ஸ் நிறைந்த காதல் பாட்டு சமீபத்தில் வெளியாகி  இளசுகளை சுண்டி இழுத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த படத்துக்கு இளமை துள்ளலாக இசையமைத்திருப்பது யுவன்சங்கர் ராஜா.  



`பியார் பிரேமா காதல்' படத்தின் இசையை இசைஞானி இளையராஜா வெளியிட்டார். விழாவில் பேசிய தனுஷ், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன்  இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார்.  மேலும் எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இந்த விழாவில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.