பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு இந்த விதிமுறை மட்டும் அவசியமாம்!

Last Modified வியாழன், 24 ஜூன் 2021 (18:40 IST)
பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழகமெங்கும் அமோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன் முடிவடைந்துள்ளது. 5வது சீசன் அடுத்து ஆரம்பிக்க உள்ள நிலையில் அதையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.இந்த சீசன் ஜூன் மாதமே துவங்க வேண்டிய நிலையில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கினாள் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிகழ்ச்சி துவங்கும் என கூறப்படுகிறது. போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கவுள்ளது. ’


கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதியை அமல்படுத்தியுள்ளதாம் பிக்பாஸ் தயாரிப்பு நிர்வாகம்.
இதில் மேலும் படிக்கவும் :