திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 மே 2021 (16:04 IST)

நடிகர் ஜூனியர் என் டி ஆருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என் டி ஆருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், முன்னாள் முதல்வர் என் டி ஆரின் பேரனுமான ஜூனியர் என் டி ஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா பாஸிட்டிவ் என சோதனையில் தெரியவந்துள்ளது. வருத்தப் படவேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். எங்கள் குடும்பத்தின் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் சோதித்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.