வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (20:07 IST)

பிகில் டீஸர், டிரெய்லர், பட ரிலீஸ் டேட் எப்போது? வெளியான அப்டேட்

பிகில் டீஸர், டிரெய்லர், பட ரிலீஸ் டேட் எப்போது என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். படத்தின் படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த படம் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது என தெரிகிறது. 
 
ஆனால், படம் தீபவளிக்கு முன்னரே அக்டோபர் 24 ஆம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் மாதத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை வெளியாகிவிடும் என்றும் தெரிகிறது.