புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (17:50 IST)

விஜய் படத்தின் வெறித்தனமான பாடகர்கள்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபுறமும், இன்னொரு புறம் புரமோஷன் பணிகளும் அடுத்ததாக வியாபாரம் ஒருபக்கமும் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே' பாடல் உலகம் முழுவதும் வைரலான நிலையில் அடுத்த பாடலான 'வெறித்தனம்' பாடல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலை பாடிய பாடகர்கள் குறித்த தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
 
'வெறித்தனம்' பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளதாகவும், கிளாசிக் மெலடி பாடலான இந்த பாடல் மிகவிரைவில் வெளீயாகவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது
 
விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது