'பிகில்' விஜய்யின் கடைசி நாள்: மோதிரம் வாங்கி வழியனுப்பிய படக்குழுவினர்

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (22:58 IST)
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்
இந்த நிலையில் இன்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் விஜய் இன்று விடைபெற்று சென்றார். இன்று கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையால் மோதிரம் கொடுத்து அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார். விஜய்யிடம் இருந்து மோதிரம் பெற்ற படக்குழுவினர் அவரை நல்ல முறையில் வழியனுப்பி வைத்தனர்
'பிகில்' படம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் விஜய் முடித்து விட்டதால் அடுத்த படத்திற்கு அவர் விரைவில் தயார் ஆவார் என்று பார்க்கப்படுகிறது. விஜய் தவிர மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் படப்பிடிப்பு பணிகள் ஒருபக்கமும் தொழில்நுட்ப பணிகள் இன்னொரு பக்கமும் நடைபெற்று வருவதால் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு அனுப்ப படக்குழுஇவ்னர் திட்டமிட்டுள்ளனர் இதனை அடுத்து இந்த படம் வரும் தீபாவளி அன்று எனக்கு பெரிதாக வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,
இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்


இதில் மேலும் படிக்கவும் :