வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (00:02 IST)

பிரபல நடிகருக்கு ஐக்கிய அமீரகம் கெளரவம்

ஐக்கிய அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு கோல்டன் விசா வழங்கிச் சிறப்பித்து வரும் நிலையில், மலையாள சினிமாவில் முன்னணி நடிகருக்கும் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த  நடிகர்கள்  மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலா பால், ஆண்ட்ரியா, த்ரிஷா, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கோல்டன் விசா வழங்கிச் சிறப்பித்தது.

இந்த நிலையில், இன்று மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் திலீப்க்கு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது ஐக்கிய அமீரக அரசு.

இந்தக் கோல்டன் விசா வைத்துள்ளவர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடியரசின் குடிமகன்களாவர்.