செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (17:43 IST)

தேர்தலுக்கு தயாரான பிரபல நடிகர்...பாதுகாப்புக்கு கோடிகள் செலவழித்து வாங்கப்பட்ட 8 கார்கள் !

பிரபல நடிகர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இப்போதே அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண். சிரஞ்சீவியின் தம்பியான இவர்  முன்னணி நடிகராக வலம் வரும் போதிலும்,  ஜன சேனா என்ற கட்சியை ஆரம்பித்து தொர்டர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வக்கீல்  சாப் ,  நாயக் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், அடுத்து நடைபெறவுள்ள ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமென்று தீவிரமாக இயங்கி வரும் பவன் கல்யாண், அக்டோபர் 5 முதல் இதற்கான பிரச்சாரத்த தொடங்கவுள்ளார்.

இதற்காக அவரது பாதுகாப்பிற்காக  8 கருப்பு ஸ்கார்பியோ கார்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் சுமார் ஒன்றரைக் கோடி செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.