விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ

vijay
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ
Mahendran| Last Modified செவ்வாய், 22 ஜூன் 2021 (20:24 IST)
நடிகர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே

கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர், என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


உதயநிதி ஸ்டாலின் தயாரித்து திரைப்படத்தில் விஜய் நடித்து இருந்தார் என்பதும் அப்போது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :