1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (17:42 IST)

Beast ஷூட்டிங்கில் சிலைகளுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் சேவியர் இயக்கி வரும் படம் தளபதி 66. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. 
 
மேலும் படத்தின் தலைப்பு பீஸ்ட் என்றும் வைக்கப்பட்டது. இதையடுத்து இரவு படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் இரண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு இரண்டு சிலைகளுடன் அமர்ந்து விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமுகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.