ஆல் தோட்ட பூபதி-க்கு ஆட்டம் போட்டு விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 22 ஜூன் 2021 (18:37 IST)
'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு நடனம் ஆடி நடிகர் விஜய்க்கு  கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவர் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் வெளியானது. 
 
நெல்சன் இயகக்த்தில் விஜய் நடித்துள்ள விஜய் 65 படத்திற்கு Beast என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்ளும் சக திரைக்கலைஞர்களும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய்க்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு நடனம் ஆடி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யின் பிறந்தநாளுக்கு கீர்த்தி அவருக்காக அவரது தீவிர ரசிகையாக குட்டி சப்ரைஸுகளை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிட்டத்தது. 
 


இதில் மேலும் படிக்கவும் :