வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:43 IST)

அரசு அலுவலகங்களில் நடக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை.

இந்த படத்துக்காக ஷங்கர் மாதத்தில் 10 நாட்கள் ஒதுக்கியுள்ளாராம். அதில் அவர் கமல் சம்மந்தமான காட்சிகளை படமாக்குவாராம். இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள ஷூட்டிங் சென்னையில் அதிகளவில் அரசு அலுவலகங்களில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. முந்தைய பாகத்தைப் போலவே லஞ்சம் சம்மந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கியுள்ளார்களாம்.