திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (14:01 IST)

மணிகண்டனின் லவ்வர் படத்தைப் பார்த்து பாராட்டிய அரசியல் பிரபலம்!

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகின. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருப்பது தெரியவந்தது. இணையத்தில் படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் 18 இடங்களில் இடம்பெற்றுள்ள கெட்டவார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்து நடிகர் மணிகண்டனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இதை மணிகண்டனே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.