1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (13:59 IST)

மணிகண்டன் நடிக்கும் லவ்வர் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு லவ்வர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் டீசர் வெளியானது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருப்பது தெரியவந்தது.

இந்த படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.