1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (12:54 IST)

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

nenjukku
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது 
 
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 139 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 19 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்பது குறிப்பிடத்தக்கது
 
அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில்  உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.