விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் விலகல் – மேகா ஆகாஷுக்கு அடித்தது ஜாக்பாட் !

Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (12:36 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு அமலாபால் ஒப்பந்தமானார்.

இப்போது திடீரென அந்தப்படத்தில் இருந்து அமலா பால் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தேதிகள் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக நடிகை மேகா ஆகாஷ் அந்தப்படத்தில் நடிக்க பந்தமாகியுள்ளார்.

 இதில் மேலும் படிக்கவும் :