திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (16:04 IST)

’’சர்பட்டா’’ படத்தைப் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ரிலீஸான சர்பட்டா படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களின்  நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பில் நேற்று முன் தினம் ரிலீஸான படம்  சார்பட்டா பரம்பரை. இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். பா.ரஞ்சித்தின் இயக்கத்தையும் திரைக்கதை அமைப்பையும் சினிமாத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சர்பாட்டா படத்தைப் பாராட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

மேலும், கபிலனாக அசத்தியுள்ள நண்பர் @arya_offl, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக @PasupathyOffl சார், டான்ஸிங் ரோஸ் @shabzkal, வேம்புலி @johnkokken1,#JohnVijay என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் @beemji க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் எனத்  தெரிவித்துள்ளார்.