திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:20 IST)

பாசமலர், கிழக்குச் சீமையிலே வரிசையில் உடன்பிறப்பே!

சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகும் உடன்பிறப்பே திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

கத்துக்குட்டி என்ற படத்தின் இயக்குனர் து ப சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் கிழக்குச் சீமையிலே படத்தின் ராதிகா மற்றும் விஜயகுமார் ஆகியவர்களை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் மினிமம் கியாரண்டி படங்கள்.  பாசமலர், கிழக்குச்சீமையிலேயே தொடங்கி சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை வரை எல்லா படங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.