1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (11:07 IST)

யூ ஏ சான்றிதழுடன் குடும்ப பேய்கள் வர்றாங்க ! தில்லுக்கு துட்டு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சக்க போடு போடு ராஜா படத்தை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக நடித்துள்ள காமெடி பேய் படம் தில்லுக்கு துட்டு 2. 



தில்லுமுல்லு துட்டு மாஸ் ஹிட்டானதால் இரண்டாவது பாகமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராம் பாலா இயக்கியுள்ள இப்படத்தில் ஹேண்ட் மோட் பில்ம்ஸ் தயாரித்துள்ளது. தில்லுக்கு துட்டு 2 படத்தில் சந்தானம், தீப்தி சதி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ஷ்ரத்தா ஷிவதாஸ் , பிபின் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குடும்ப பேய் படமான தில்லுக்கு துட்டு 2 படத்துக்கு யூ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என சந்தானம் அறிவித்துள்ளார்.