செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (11:42 IST)

கார்த்தியின் "தேவ்" பட ஆடியோ ரிலீஸ் தேதி!

நடிகர் கார்த்தி நடிக்கும் "தேவ்" படத்தின் பாடல்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது .


 
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கார்த்தி 17 என கூறப்படும் தேவ். நடிகர் கார்த்தியின் கிளாஸ் லுக் படத்திற்கு கூடுதல் வலு என்றே கூறலாம். 
 
இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் தேவ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக ஊடங்கங்களில் பெரிதும் பேசப்பட்டது.
 
படத்தின் முதல் பாடல் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் என்ற செய்தி வெளியாகியது. ஆடியோ ஜுக் பாக்ஸ்  மொத்தம் 25நிமிடம் என கூறப்படுகிறது.
 
தற்போது தேவ் படத்தின் ஆடியோ வரும் டிசம்பர் 29-ம் தேதியில் வெளிவர வாய்ப்புள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.