1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (12:00 IST)

சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்தின் 'மணிகர்னிகா'

ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் இயக்கி வருகிறார். 


 
இந்த படம் சம்பளபாக்கி பிரச்சனை காரணமாக சர்ச்சையில் சிக்கி உள்ளது.
 
'மணிகர்னிகா'  படத்தில் பணியாற்றியவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் வரை சம்பள பாக்கி இருப்பதால் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என  இந்திய சினிமா, டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.