1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:55 IST)

விஜய் 69 ஆவது படத்தை தயாரிக்கப் போவது யார்?.. இரண்டு முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டி!

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருந்த டிவிவி நிறுவனத்தின் தானய்யா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இதனால் இந்த படத்தை யார் தயாரிக்கப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி பேஷன் ஸ்டிடியோஸ் மற்றும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் அந்த படத்தை தயாரிக்க விஜய்யை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யாருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.