அஜித்துக்காக வைத்திருந்த டைட்டிலை எங்களுக்குக் கொடுத்தார்… முருகதாஸுக்கு அருண் விஜய் நன்றி!
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார். இப்போது அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.
இதையடுத்து அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார். தற்போது படத்த்துக்கு அருண் விஜய் 36 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு ரெட்ட தல என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் குறித்து பேசியுள்ள அருண் விஜய் “இந்த டைட்டிலை கடந்த 10 வருடங்களாக ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார். அஜித் சாரை வைத்து அவர் இயக்க இருந்த படத்துக்காக வைத்திருந்த டைட்டிலை எங்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளார்” எனக் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.