1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2020 (16:27 IST)

செல்வராகவன் அடுத்த படம் குறித்து டுவீட் ! புதுப்பேட்டை 2 ? ரசிகர்கள் ஆர்வம்!

செல்வராகவன் அடுத்த படம் குறித்து டுவீட் ! புதுப்பேட்டை 2 ? ரசிகர்கள் ஆர்வம்

தமிழ்  சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்பராகவன். இவர் தனது முதல் படமான காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இந்நிலையில் இவர் தனது அடுத்த படம் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த வருடம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் வெளியானது. அது அவரது ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை என தெரிகிறது.
 
அதன்பிறகு தனது புதிய படம் பற்றி அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதில் குறிப்பாக, சந்தானத்தை வைத்து அவர் இயக்கி வந்த மன்னவன் வந்தானடி  படமும் , எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் திரைக்கு வராமல் உள்ளன.
 
இந்த நிலையில், செல்வராகவன் தன் அடுத்த படம் குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.  அதில், அடுத்த படத்துக்கான  கதை எழுத தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் நடிகர் தனுஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
ஒருவேளை தனுஷ், செல்வராகவனின் கூட்டணி சில வருடங்களுக்கு முன்வெளியான புதுப்பேட்டை படத்தின் 2 ஆம் பாகம் தயாராகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.