வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 16 ஜனவரி 2020 (18:12 IST)

அவரால் திரையில் நிகழும் அதிசயம் ... உருகித்தான் போகிறோம் - சீமான் டுவீட்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்களை பிரபல பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார் ( விஜய்யின் ,ஆள்தொட்ட பூபதி; ஆடுங்கடா என்ன சுத்தி; கரிகாலன் காலப் போல பாடல்களை எழுதியவர்). இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், சைக்கோ,மேஸ்ட்ரோ,மிஷ்கின்,கபிலன்
 
 
"உன்ன நெனச்சி நெனச்சி உருகிபோனே மெழுகா
 
நெஞ்ச ஒதச்சி ஒதச்சி பறந்துபோனா அழகா" ...40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக அவரால் திரையில் நிகழும் அதிசியம், இதிலும் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் உருகித்தான் போகிறோம்.
நன்றி ஐயா இளையராஜா எனப்  பதிவிட்டுள்ளார்.