1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (19:49 IST)

இந்தியன்-2 படத்தால் 8 லட்சம் அதிகம் செலவு செய்த சுரேஷ் காமாட்சி

இந்தியன்-2 படத்தால் 8 லட்சம் அதிகம் செலவு செய்த சுரேஷ் காமாட்சி
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான நிலையில் இதனை ஒரு பாடமாக கருத்தில் கொண்டு ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தன்னுடைய படத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ரூ 30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார் இதற்காக அவர் தனியாக சுமார் 8 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சுரேஷ் காமாட்சியின் இந்த நடவடிக்கையை அனைத்து தயாரிப்பாளர்களும் பாராட்டி வருகின்றனர். இதேபோல் தமிழ் சினிமாவில் திரைப்படம் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் இதனை பின் ஆற்ற வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்
 
ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கொட்டிக்கொடுக்கும் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு ஒருசில லட்சங்கள் செலவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோலிவுட்டில் குரல் வலுவாக ஒலிக்க தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது