ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:10 IST)

மகளுக்கு சீர்வரிசை வாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட தாய்: சென்னையில் பரபரப்பு

மகளுக்கு சீர் வரிசை வாங்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை தாம்பரம் மூகாம்பிகை நகர் என்ற பகுதியை சேர்ந்த நிர்மலா தேவி என்ற 55 வயதான பெண் ஒருவரின் மகள் திருமணம் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகளின் திருமணம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் திருமணத்திற்கான சீர்வரிசை வாங்குவதற்காக அவர் பணத்தை ஏற்பாடு செய்தார் 
 
ஆனால் அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. மேலும் கேட்ட இடத்திலும் கடன்களும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட சோகம் காரணமாக திடீரென மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது