1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (14:23 IST)

சீமானின் இரட்டை வேடத்தை நிரூபிக்க முயன்ற ஊடகவியலாளர் - கஸ்தூரி டிவீட்

நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில், சீமானின் இரட்டை வேடத்தை நிரூபிக்க முயன்ற ஊடகவியலாளார் முக்தார், திமுக பிரதிநிதியாகவே மாறியுள்ளதாக விமர்சித்து ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் சத்தியம் செய்திகளும் ஒன்று. இத்தொலைக்காட்சியில்  நேருக்கு நேர் என்ற நேர்க்காணல் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.

இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பல முன்னணி இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துககளை கூறி வருகின்றனர்.

இந்த நேர்காணலை  நடத்துபவர் பிரபல ஊடகவியலாளர் முக்தார். இவர், அடுக்கடுக்கான கேள்விகளா,   நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களை பேசவிடாமல் செய்வதாகவும் ஒருதலைப்பட்சமாக கேள்வி எழுப்புவதாகவும்  கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் இவர், இயக்குனர்  களஞ்சியம் அவர்களிடம் நேர்காணல் செய்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு களஞ்சியமும் பதில் அளித்திருந்தார்.

இந்த  நிலையில், இந்த நிகழ்ச்சியைப் பார்த்த  நடிகை கஸ்தூரி,தன் டுவிட்டர் பக்கத்தில், அவரே  பகிர்ந்ததால் இந்த பேட்டியை பார்த்தேன். முக்தார் சீமானின் இரட்டை வேடத்தை நிரூபிக்க முயன்று தனது இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்.  25 நிமிட காணொளியில் களஞ்சியம் அவர்களின் கருத்துக்களை விட, திமுக பிரதிநிதியாகவே மாறி முக்தார் பேசியதே அதிகம் என்று பதிவிட்டுள்ளார்.

 
Edited by Sinoj