திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:50 IST)

ஹேப்பி பர்த்டே அமிதாப் ஜீ..! 80வது பிறந்தநாள்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Amitabh Bachchan
இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமிதாப் பச்சன். 1969ல் வெளியான சாத் இந்துஸ்தானி என்ற படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கிய அமிதாப் பச்சன், தற்போது வயது மூப்பு காரணமாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்று அமிதாப் பச்சனின் 80வது அகவை பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமிதாப் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “அமிதாப் பச்சன் ஜிக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K