ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (06:45 IST)

தலன்னா ஒருத்தர்தான்… லியோ வெற்றி மேடையில் அஜித் பற்றி பேசிய விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான 12 நாட்களில் 541+ கோடிகளை வசூலித்து படம் மிகப் பெரும் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.

அப்போது சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக “புரட்சி தலைவர் ன்னா ஒருத்தர் தான்.. நடிகர் திலகம் ன்னா ஒருத்தர் தான்.. புரட்சி கலைஞர் ன்னா ஒருத்தர் தான்... அது போல உலகநாயகன்  ன்னா ஒருத்தர் தான்... சூப்பர் ஸ்டார்  ன்னா ஒருத்தர் தான்... தல ன்னா....  ன்னா ஒருத்தர் தான்...” எனக் கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.