திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (20:04 IST)

மணிரத்னத்திடம் வலிய சென்று வாய்ப்பு கேட்ட த்ரிஷா!

மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்றே சொல்லலாம். கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், சத்யராஜ், நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க படக்குழுவினர் அனுஷ்காவை அணுகியுள்ளனர்.
 
 
பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டரின் முக்கியத்துவத்தையும் அதற்கு தேவைப்படும் கால்ஷீட் தேதிகளையும் கணக்கிட்டு ரூபாய் 4 கோடி சம்பளம் அனுஷ்கா கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அந்த சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டதாகவும் அனுஷ்காவுக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்யலாம் என மணிரத்னம் அவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது
 
 
இந்த நிலையில் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக யார் இருப்பார்கள் என்ற பரிசீலனை நடந்து கொண்டிருந்தபோது த்ரிஷா இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று பரிசீல்னை செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த த்ரிஷா உடனடியாக மணிரத்னம் அவர்களிடம் போன் செய்து உங்கள் படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றும் சம்பளம் பற்றிப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியது மட்டுமின்றி உடனடியாக மணிரத்னம் அலுவலகத்திற்கும் த்ரிஷா வந்துவிட்டார்.
 
 
மணிரத்னம் தனக்கான கேரக்டரை கேட்டவுடன் உற்சாகமான த்ர்ஷா, சம்பளம் பற்றி எதுவுமே பேசாமல் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், இருப்பினும் அவருக்கு ரூபாய் ஒரு கோடி சம்பளம் கொடுக்க லைக்கா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிக்கும் கேரக்டர் என்ன என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் தகவல் வெளியாகும்