1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (07:29 IST)

ஒரே நாளில் அஜித், விஜய்யை சூப்பர் ஸ்டார் ஆக்கிய இரண்டு பெண் பிரபலங்கள்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி கடந்த சில வருடங்களாக அஜித்-விஜய் இடையே நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் அஜித், விஜய் ஆகிய இருவரையும் இரண்டு பெண் பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
நேற்று விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்கள் தனது மகனுக்கு எழுதிய ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த் ஆகியோர்களை அடுத்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு சென்று கொண்டிருக்கும் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், இந்த கடிதம் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது 
 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை த்ரிஷா 'நேர்கொண்ட பார்வை திரைப்படம்' போன்று ஒரு படத்தில் அஜித் நடித்திருப்பது நடித்துள்ளது அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை காட்டுகிறது என்று தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் ஷோபா சந்திரசேகர் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து பாராட்டியது தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்ததா? என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன