திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (21:51 IST)

எஸ்.எஸ்.ராஜமவுலியை சந்திக்க மணிரத்னம் திட்டம்: ஏன் தெரியுமா?

மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சத்யராஜ், நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, அமலாபால், ஜெயராம்  உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் மணிரத்னம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சுமார் 900 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் தினமும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. போர் காட்சிகள் மற்றும் அரசசபை காட்சிகள் ஆகிய காட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் தேவை. இந்த நிலையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து பாகுபலி, பாகுபலி 2, ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியை மணிரத்னம் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே மணிரத்னம் அனுப்பிய குழு ஒன்று, எஸ்எஸ் ராஜமவுலியை சந்தித்து ஆலோசனை செய்து இருப்பதாகவும், விரைவில் மணிரத்னம் - ராஜமௌலி சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பொன்னியின் செல்வன் உருவாக்கத்தில் ராஜமௌலியின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது