செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (17:56 IST)

த்ரிஷாவின் அடுத்த படத்தை தயாரிக்கும் ரஜினி-கமல் தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்த '2.0', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களையும் சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வரும் நிறுவனம் லைகா. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வந்தா ராஜாதான் வருவேன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்சன் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். இந்த படத்தை 'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' மற்றும் வல்லினம் போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பாதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் வெற்றிநடை போட்டுவரும் த்ரிஷா தற்போது சதுரங்க வேட்டை 2', '1818', 'பரமபத விளையாட்டு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.