செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ANADHA KUMAR
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (15:31 IST)

மாணவர்களுக்காக தான் ஆசிரியர்கள் ...போராட்டம் என்பது கூடாது - தம்பிதுரை பேட்டி

மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக தான் தற்காலிக ஆசிரியர்கள் பணியிடம். அது நிரந்தரம் கிடையாது.மேலும்., ஆசிரியர்களுக்காக தான் மாணவர்கள் கிடையாது. மாணவர்களுக்காக தான் ஆசிரியர்கள் எனவே  போராட்டம் என்பது கூடாது என்று கரூர் அருகே மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டியளித்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில், பூமி பூஜை மற்றும் அம்மா பார்க் திறப்பு விழா நிகழ்ச்சிகள் என்று 13 திட்டங்களுக்காக பூமி பூஜை, ரூ ஒரு கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை கலந்து கொண்டு, துவக்கி வைத்தார். 
 
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் ஆங்காங்கே ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கேள்வி கேட்டதற்கு, அந்த போராட்டம் குறித்து தற்போது உயர்நீதிமன்றமே விசாரணை நடத்தி வருகின்றது. 
 
மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நான் மாநில அரசின் போராட்டம் குறித்து பேசுவது சரியாக இருக்காது. அது குறித்து அந்தந்த அமைச்சர்கள் கூறினால் தான் நல்லது என்றும்., மேலும் ஒரு சில இடங்களில் கைதும், கைதிற்கு பின்னர் விடுதலை என்றும் இருக்கின்றது. இந்நிலையில், அதற்காக தான் தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக அரசு அறிவித்துள்ளது. 
 
இது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தினை போல சரியாகி விடும் என்றதோடு, மாணவர்களுக்காக தான் ஆசிரியர்களே தவிர, ஆசிரியர்களுக்காக மாணவர்கள் கிடையாது, ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தினை பார்க்க வேண்டுமென்றார். பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டுமென்றும் உயர்நீதிமன்றமே கூறியுள்ளது. 
 
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார். அது ஒரு தற்காலிக ஏற்பாடு தானே தவிர, நிரந்தர ஏற்பாடு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பா.ஜ.க உடன், அ.தி.மு.க கூட்டணியில் இருக்குமா? என்ற கேள்விக்கு, நாங்கள் (அ.தி.மு.க) கூட்டணியில் இருக்கோமா? இன்று வரை இல்லை, இனிமேலும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எந்த கட்சி தமிழகத்திற்கு நல்லது செய்கின்றதோ, அந்த கட்சியுடன் தான், கூட்டணியே தவிர, பா.ஜ.க வின் மத்திய அரசு, தமிழக மக்களுக்கும், சரி, தமிழர்களுக்கும் எந்த வித நல்லதும் செய்ய வில்லை. ஒருவேலை கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமேயானால், தேர்தல் அறிவித்த பிறகே தவிர இதுவரை கூட்டணி கிடையாது என்றார். 
 
தமிழக அரசின் கோரிக்கைகள் நிறையவற்றை நிறைவேற்றவில்லை.  நீட் தேர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றைகளை எதிர்த்தோம் ஆனால், அதை செவி சாய்க்க வில்லை, ஜி.எஸ்.டி யில் ரூ 5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது என்றதோடு, பா.ஜ.க வின் மத்திய அரசு செய்யட்டும் கூட்டணி குறித்து மேலிடம் ஆலோசிக்கும், பா.ஜ.க கூட்டணி குறித்து பேசினாலே பிரச்சினை வரும், ஆகவே தமிழர்களையும், தமிழ்நாட்டினையும் காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க இயக்கம் தான் என்றார். தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து வருகின்றதா ? என்றதற்கு கட்சி என்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டுமே தவிர, திட்டங்கள் தீட்டுவதில் மட்டுமே பா.ஜ.க முயற்சிப்பதே தவிர, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ள வேண்டுமென்றார். 
 
திராவிட கட்சிகளின் செயல்பாடு இடஒதுக்கீட்டு கொள்கை என்று அனைத்து விதத்திலும் பா.ஜ.க வுடன் ஒத்துவராது, காங்கிரஸ் கட்சியே காணாமல் போய் விட்டது என்று உதாரணத்திற்காக கூறினார். யாரையோ திருப்தி படுத்துவதற்காக, பல திட்டங்களை கொண்டு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு திட்டங்கள் நல்ல முறையில் தீட்ட வேண்டுமென்றார். பா.ஜ.க கட்சி தென் மாவட்டத்தில் (தென் தமிழகத்தில்) 10 இடங்களில் பிடிக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளதை தெரிவித்ததற்கு,. அது அவர்களுடைய விருப்பம், ஆனால், அது குமரிக்கண்டம் என்றதோடு, எங்கள் கட்சியின் விருப்பம் நாளையும் நமதே 40 ம் நமதே என்றார்.

ஆகவே பொருளாதாரத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு எந்த வித நன்மையும் பா.ஜ.க அரசு செய்யவில்லை என்றார். பேட்டியின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உடனிருந்தார்.