வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஏப்ரல் 2023 (14:41 IST)

‘’சூர்யா42’’ பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

‘’சூர்யா42’’ பட ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான சரிகம பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில்,  சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் சூர்யா 42. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வருகிறது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சமீபத்தில் சூர்யா 42 பட  புதிய போஸ்டர் ரிலீஸானது.

இந்த நிலையில், சூர்யா 42 பட இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், இப்பட ஆடியோ உரிமையை பிரபல சரிகம பெற்றுள்ளது. இதை தயாரிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சூர்யா- தேவிஸ்ரீபிரசாத் இணைந்த ஆறு, சிங்கம் 1-2 ஆகிய படங்களைப் போன்று இப்படத்தின் பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.