வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (10:39 IST)

ஷாருக் மகன் கைது அரசியல் நோக்கம் கொண்டதா? டோவினோ தாமஸ் கூறிய பதில்!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளர். இந்த கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் ஷாருக் கானுக்கு ஆதரவாக பேசினர்.

இந்நிலையில் மலையாள நடிகரான டோவினோ தாமஸ் பாலிவுட் இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கேட்கப்பட்ட போது அரசியல் உள்நோக்கம் கொன்டது எனதான் தான் நினைப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அவர்  ‘ஷாருக் கானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் நோக்கம் என்றுதான் தோன்றுகிறது. நான் உறுதியாக சொல்லவில்லை. ஆனால் அப்படிதான் தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.