10 கோடி தடுப்பூசிகளை தாண்டியது தமிழகம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டு அலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்புகள் அதிகரித்த நிலையில் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாக மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு பலருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 22 தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ள நிலையில் இன்று 23வது தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலவரம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “இந்தியாவில் மராட்டியம், உத்திரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை செலுத்திக்கொண்ட தடுப்பூசி எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. நேற்று வரை 10,00,30,346 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஒரு பெரும் இலக்கு” என்று கூறியுள்ளார்.