செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (19:09 IST)

முடிவுக்கு வருகிறது நடிகர் சங்க பிரச்சனை: நாளை தீர்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் காரணமாக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளது 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்தி வைத்த நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்தது தொடர்பாக விஷால் கார்த்திக் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பும் நாளை நாளை வெளியாக உள்ளது 
 
இதனை அடுத்து நடிகர் சங்க பிரச்சனைகள் அனைத்திற்கும் நாளைய தீர்ப்பு தீர்ப்பால் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தீர்ப்பு பின்னரே நடிகர் சங்க தேர்தல் செல்லுமா? வாக்குகள் எண்ணப்படுமா? அல்லது புதிதாக மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? என்பது தெரியும். அதே போல் தனி அதிகாரி ராஜ்ஜியம் தொடருமா? அல்லது நடிகர் சங்க நிர்வாகிகளின் கைக்கு நடிகர் சங்கம் வருமா? என்பதும் நாளைய தீர்ப்பில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது