திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 மே 2022 (12:05 IST)

காஸ்ட்லில் கிப்டா கொடுக்கனும்... விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!

கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120-ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளரான அக்கீம் என்பவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திருமண பரிசாக மணமக்களுக்கு தக்காளியை வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.
 
ஆனால் இன்று கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை ஆகி வருகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.79-க்கு விற்பனையாகுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.