டிமிக்கி கொடுத்த சூப்பர் ஸ்டார்: வங்கி கணக்குகள் முடக்கம்!
சூப்பர் ஸ்டார் என டைட்டில் பார்த்ததும் நம்ம சூப்பர் ஸ்டார்னு நினைக்க வேண்டாம். இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி இருப்பது டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.
மத்திய அரசின் அவரிவிதிப்புகளுக்கு கீழ் நடிகர்களும் தொழில் செய்பவர்களாகவே கருதப்படுகின்றனர். எனவே, நடிகர்களும் சேவை வரி செலுத்துவது கட்டாயமாகும்.
அந்த வகையில், நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்து வந்துள்லா. 2007 - 2008 ஆம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி பாக்கி வைத்துள்ளார்.
இது குறித்து மகேஷ் பாபுவுக்கு ஜிஎஸ்டி ஆணையகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், எந்த நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு பதில் அளிக்கவில்லை.
எனவே, வேறு வழியின்றி நடிகர் மகேஷ்பாபுவின் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி என 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த 2 கணக்குகளில் ரூ.73.5 லட்சம் பணத்தை சேமித்து வைத்து இருந்துள்ளார்.
இந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் அதன் வட்டி வசூலிக்கப்பட உள்ளது.