புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:36 IST)

ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷலாக 'காலா' செகண்ட்லுக்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் ரஜினியின் பிறந்த நாளை அடுத்து இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ள செகண்ட் லுக் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தனது டுவிட்டரில் 'காலா' செகண்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.