திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (19:10 IST)

ரஜினி பிறந்த நாளின் ஒரு வினாடிக்கு முன் ஆர்யாவின் அசத்தல் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் இம்மாதம் 12ஆம் தேதி அன்று அவரது ரசிகர்களால் பிரமாண்டமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும்  நடைபெற்று வருவது தெரிந்ததே

இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாள் தொடங்கும் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒரு வினாடிக்கு முன் அதாவது 11.59க்கு ஆர்யா நடிக்கவுள்ள 'கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ஆர்யா வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மேலும் அன்றைய தினம் அதாவது டிசம்பர் 11ஆம் தேதி ஆர்யாவின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஃபர்ஸ்ட்லுக் ஆர்யா மற்றும் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஹரஹர மகாதேவகி' இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் 'கஜினிகாந்த்' என்பது குறிப்பிடத்தக்கது.