செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:00 IST)

சின்னத்திரைகளுக்கும் இனி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு..!

பெரியதிரை திரைப்படங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வரும் நிலையில் இனி சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் என செய்தி ஒளிபரப்பு துறை தெரிவித்துள்ளது. 
 
திரைப்படங்களுக்கு விருது வழங்குவது போல் சின்னத்திரை தொடர்களுக்கும் விருதுகள் வழங்க வேண்டும் என நீண்ட நாளாக சின்னத்திரை கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்
 
இந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை செய்யப்பட்டு சின்னத்திரைகளுக்கும் விருது வழங்க செய்தி மற்றும் விளம்பர துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 2 லட்சம் இரண்டாம் பரிசு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரையின் இந்த அறிக்கைக்கு சின்னத்திரை கலைஞர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva