திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:48 IST)

ஆரம்பமே அலைக்கழிப்பா இருக்கு… நாய் சேகர் தலைப்புக்கு வந்த பிரச்சனை!

வடிவேலு நடிக்கும் ரி எண்ட்ரி படமாக நாய் சேகர் படம் உருவாக உள்ளது.

வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது.  இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சூட்டோடு சூடாக வடிவேலு தன்னுடைய முத்திரைக் கதாபாத்திரமான நாய்சேகர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். அதன் பின்னர் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் வரிசையாக காமெடியன் வேடங்களில் நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில் நாய்சேகர் பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ள நிலையில் ஒரு புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது. சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அந்த பெயரைதான் பதிவு செய்து வைத்திருந்ததாம். ஆனால் இப்போது வடிவேலுவே அந்த தலைப்பில் புதிய படத்தை ஆரம்பிப்பதால் யார் விட்டுக் கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.