வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 ஜூன் 2019 (16:04 IST)

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கலாய்த்த டிக்டாக் மணி ! வைரல் வீடியோ

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் மிக ஃபேமஸான ஒரு நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. ஒரு கும்பத்தில் அல்லது வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் தீர்வு கொடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இந்த நிகழ்ச்சியைதொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவார்.
இந்நிலையில் தற்போது, இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அடுத்ததாக இந்த நிகழ்ச்சி நடக்குமார் இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது.இல்லை நிகழ்ச்சி தொகுப்பளராக வேறு யாரேனும் தொகுத்து வழங்குகிறார்களா என்பதும் சந்தேகமாகாவே உள்ளது. 
 
இந்நிலையில்  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து, டிக் டாக்கில் டிரெண்டிங் பாய்ஸ் என்ற பெயரில் இரு இளைஞர்கள் டிக் டாக்கில் பேசி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இந்நிலையில் ஒரு தனியார் சேனலுக்கு லட்சுமிராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் நான் இந்த டிக்டாக் பசங்களின் டேலண்ட் தெரிகிறது என்று பாராட்டியுள்ளார். ஆனால் ஒருவன் காசுக்காக மேடையில் இந்த மாதிரி செய்கிறான் அவனிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.